கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இதே காலப் பகுதியில் சொந்த வீடுகளை கொள்வனவு எண்ணிக்கையிலான 8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில் வீடுகளை சொந்தமாக வாங்க எத்தனித்த கனேடியர்களை விடவும் தற்பொழுது குறைந்த எண்ணிக்கையிலானவர்களே வீடுகளை கொள்வனவு செய்ய விரும்புகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இள வயதினர் வீடுகளை கொள்வனவு செய்வதனை விடவும் வாடகைக்கு பெற்றுக்கொள்வதற்கு அதிகளவு ஆர்வம் காட்ட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூடுதல் தொகை சம்பளம் பெற்றுக் கொள்பவர்கள் கூட வீடு கொள்வனவை விடவும் வாடகை வீட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கினை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வீட்டு உரிமையாளர்கள் இவ்வர்று வீடுகளை வாடகைக்கு விடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.